வியாழன், 21 மே, 2026
|
தினசரி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை: கழுத்து நெரிக்கப்பட்டமை மருத்துவ அறிக்கையில் உறுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை: கழுத்து நெரிக்கப்பட்டமை மருத்துவ அறிக்கையில் உறுதி!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மே 21, 2026 · 1 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை சட்ட மருத்துவ அலுவலரின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இல் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று (20.05.2026) நடைபெற்றது. இவ்விசாரணையின் போது விரிவுரையாளரின் மகனும் காவல் துறையினரும் சாட்சியமளித்தனர்.

இதன்போது சாட்சியமளித்த காவல் துறையினர், உயிரிழந்த விரிவுரையாளரின் இறப்புக்கான கரணியம் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமையே எனச் சட்ட மருத்துவ அலுவலரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததுடன், சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் ஐயம் உள்ளதாகத் தெரிவித்தனர்.

இருவரது மரண விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கைக் கூர்வரும் சூன் மாதம் 3 ஆம் நாளுக்குத் திகதியிட்ட நீதவான், கைது செய்யப்பட்டுச் சிறைக்காவலில் உள்ள மூத்த விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் சிறைக்காவல் காலத்தை அன்றைய நாள் வரை நீடித்துக் கட்டளையிட்டார்.

வழக்கு விசாரணை யின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சிறிலங்கா அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிசுலசு துசானும், முதலாவது ஐயத்திற்குரியவரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேசுவரனும், இரண்டாவது ஐயத்திற்குரியவராகப் பெயர் குறிப்பிடப்பட்ட மூத்த விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணி யும் முன்னிலையாகினர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.