அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரத் தேர்வு (க.பொ.த உயர்தரப் பரீட்சை) முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) ஊடாகவே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு மூன்று வார கால எல்லை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டி நூல் (Handbook) இன்னும் சில நாள்களில் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.