பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகச் சுரேஷ் சலேயைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.
இவ்வாறு அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.