வெள்ளி, 27 மார்ச், 2026
|
தினசரி

யாழ்ப்பாணம் பண்ணையில் கத்திவெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணையில் கத்திவெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மார்ச் 27, 2026 · 1 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் இன்று நடைபெற்ற கத்திவெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு குறித்து மேலும் தெரியவருவதாவது: கத்திவெட்டுக்கு இலக்கானவர், சிறையில் இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுத்துவிட்டுத் தனது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார். இதன்போது, முன் பகை காரணமாக அவர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் குறித்து யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறையீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிகப் புலனாய்வுகளை யாழ்ப்பாணக் காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.