வெள்ளி, 10 ஏப்ரல், 2026
|
பன்னாடு

நைஜீரியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்!

நைஜீரியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்!
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

ஏப்ரல் 10, 2026 · 1 நிமிட வாசிப்பு

நைஜீரியாவில் கொடுஞ்செயல்கள், ஆள் கடத்தல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்கக் குடிமக்கள் அந்நாட்டிற்குப் பயணம் செய்வதை மீளாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, தலைநகர் அபுசாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இன்றியமையாத பணியில் அல்லாத ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக நைஜீரியாவை விட்டு வெளியேற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கக்கூடும்

நைஜீரியாவின் பல பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் சீர்குலைந்து வருவதாகவும், சந்தைகள், வழிபாட்டு இடங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது இடங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. நைஜீரியா முழுவதையும் "நிலை 3" எச்சரிக்கைப் பிரிவில் வைத்துள்ள அமெரிக்கா, அங்குள்ள 23 மாநிலங்களை மிகவும் அச்சுறுத்தலான "நிலை 4" (Level 4 - Do Not Travel) பிரிவில் சேர்த்துள்ளது.

குறிப்பாகப் பிளாட்டோ, சிகாவா, நைசர் மற்றும் தாராபா போன்ற மாநிலங்களில் வன்முறை நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் நைஜீரியாவிற்கு இடையே கொடுஞ்செயல் தடுப்பு மற்றும் புலனாய்வுத் துறைப் பகிர்வில் வலுவான ஒருங்கிணைப்பு இருந்தபோதிலும், கள நிலவரம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்றதாகவே இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, நைஜீரியாவின் பொருளியல் மீட்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என அந்நாட்டு அலுவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.