கோர விபத்தில் சுவிசர்லாந்து வாழ் புலம் பெயர் தமிழர் மூவர் பலி
துருக்கி இசுத்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் சுவிசர்லாந்து வாழ் ஈழத்தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மூவரும் சுவிசர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைப் பின்புலமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாயாரின் 60வது பிறந்தநாளை துருக்கி நாட்டில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் வாடகை வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.