வியாழக்கிழமை, 4 செப் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Last updated: ஜூலை 13, 2025 05:14
Share
SHARE

செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார்.

செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார்.

You Might Also Like

யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம் – விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் மக்கள் கேள்வி!
ஜே.வி.பி இரட்டை வேடம்: வாக்களித்த செந்தமிழர்கள் எங்கே?
சாவகச்சேரி நகரசபை: சைக்கிள் கூட்டுக்குள் களேபரம்; ஜேவிபி அலுவலகத்துக்கே சென்று ஆதரவு கோரிய தமிழரசு!
தமிழினப் படுகொலைக்கு நீதி எங்கே? – ஜேர்மனியில் அனுரவிற்கு எதிராக முழக்கம்!

ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சிறி லங்கா-விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சிறி லங்கா-விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரசியற் செய்திகள்
தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்!
அரசியற் செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்
அரசியற் செய்திகள்
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
அரசியற் செய்திகள்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்
அரசியற் செய்திகள்
செம்மணி விவகாரம் – ஆழ்ந்த கவலையில் பிரித்தானியா
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.