வியாழக்கிழமை, 4 செப் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

குற்றம் நடந்த இடமே செம்மணி-சர்ச்சையை தோற்றுவிக்கும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்

Last updated: ஜூலை 8, 2025 11:28
Share
SHARE

செம்மணிப் புதைகுழியில் சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிறுவர்களை எந்தவிதத்திலும் குற்றவாளிகளாகவோ – குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே, நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்த செம்மணிப் புதைகுழி காணப்படுகின்றது என்று  சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்  புதைகுழி தொடர்பான வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நேற்று அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையானார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செம்மணிப் புதைகுழியில் 12ஆம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றுள்ளது. மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்தில் இருந்து 1/12 அடி தொடக்கம் 2 அடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கின்றன. இது சடலங்களைச் சாதாரணமாக மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாகத் தெரியவில்லை.

You Might Also Like

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு பின் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற தம்பதியினர் நாடு திரும்பிய நிலையில் கைது!
கல்கிசை – காங்கேசன்துறை தினசரி கடுகதி தொடருந்து சேவை ஆரம்பம்
மின் பிறப்பாக்கியிலிருந்து வெளியான புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

மாறாகச் சடலங்கள் சடுதியாகப் புதைக்கப்பட்ட இடம் போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும்  அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.

சிறுவர்களை எந்தவிதத்திலும் குற்றவாளிகளாகவோ – குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே, நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது. இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

தினமும் கண்டெடுக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகளும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் சுமுகமாக இடம்பெறுகின்றன. அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்டுள்ளார். 

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை
Next Article செம்மணி மனிதப் புதைகுழி – இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்
இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அரசியற் செய்திகள்
மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சிறி லங்கா-விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரசியற் செய்திகள்
தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம்!
அரசியற் செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னதாக அறிந்த அநுர அரசின் முக்கிய அமைச்சர்
அரசியற் செய்திகள்
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
அரசியற் செய்திகள்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.