திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் நீக்கப்படும்! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி

Last updated: ஜூலை 4, 2025 16:05
Share
SHARE

சிறி லங்காவில் 1979 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட்டு சட்டமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது.

இந்நிலையில் குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காகக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு தற்போது அனைத்து கருத்துகள் – யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பொதுமக்களின் கருத்துகளும் கோரப்பட்டன.

You Might Also Like

ஜே.வி.பி இரட்டை வேடம்: வாக்களித்த செந்தமிழர்கள் எங்கே?
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
வன்னி பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

அந்தவகையில் செப்டெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையிலும், சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலுமே புதிய சட்டத்தை இயற்ற எதிர்பார்க்கின்றோம்.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இருந்த விமர்சனங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்படும். அதேவேளை, நூதன பூகோல பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்குரிய சட்டப் பாதுகாப்பு கவசமும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் செய்யப்படும்  என்றார்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்
Next Article செம்மணியில் 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.