கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
இந்த விடயத்தில் அரசங்கம் முன்னெடுக்கும் உரிய நடவடிக்கைகளுக்குத் தாம் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல் தலையீடுகள் இன்றி இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையாக செயற்பட முடியாத நிலையில் உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
