புஸ்ஸ உயர் பாதுகளப்பு சிறைச்சாலையில் நடுத்து வைக்கப்பட்டு, இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சகுவே குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவுக்கு எதிராக நீதிமன்றத்தில் 22 வழக்குகள் இருப்பதாகச் சிறைச்சாலை ஊடப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 09 ஆம் இலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உக்கரவிட்டிருந்தது.
மேலும் 2 வழக்குகளுக்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்தார்.
அவர் ஒரு சிறப்பு வகை சந்தேக நபர் என்பதால், அவர் புஸ்ஸ் சிறைச்சாலையிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திறகுச் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில், சிறைச்சாலை அவசரகால பதில் தந்திரோபாய் படையினர், மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் சிறப்பு பாதுகாப்பின். கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவரை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை முதற்கட்ட விசாரணைகளையும் தொடங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
