திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

அரசாங்கத்தின் முதலாவது பாதீடு நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Last updated: பிப்ரவரி 15, 2025 18:21
Share
SHARE

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.30க்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 16ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த மாதம் 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன.

இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

You Might Also Like

பன்னாடுகளிலும் ஒலிக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்வோம் – மா.சக்திவேல்
தமிழரசிடம் இருந்து விக்கியை பாதுகாக்க இனி யாரும் இல்லை: இப்படிக் கூறுகின்றார் சித்தார்த்தன்
நிலமின்றி தவிக்கும் மலையக தமிழர் – யாழ் பல்கலை மலையக மாணவர் ஒன்றியம்
சீனாவிற்கு பயணமானார் ஜனாதிபதி!

பாதீட்டு காலப்பகுதியில் காலை 9.30 முதல் 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதியில் பாதீட்டு விவாதம் இடம்பெறும்.

வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடுகள் மீளப்பெறப்பட்டன!
Next Article யாழில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம் – விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் மக்கள் கேள்வி!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.