அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்கான இரண்டாவது விமானம் நாளை அங்கு செல்லவுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில், 104 பேரை முதற்கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு இந்தியாவுக்கு நாடு கடத்தியது.
இதற்கமைய, அமெரிக்க இராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள், கடந்த 5 ஆம் திகதி இந்தியாவை சென்றடைநதனர்.
குறித்த 104 பேரில் அதிகளவானோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அமெரிக்க விசாவை பெறுவதற்கு 50 இலட்சம் இந்திய ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
