உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டினுடன் தாம் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் 2,000,000 பேர் எந்தவித காரணமுமின்றி உயிரிழந்து உள்ளனர் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கோரி வருகின்றது.
இதற்கேற்ப, அந்த நாடுகளும் இராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்ய ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜோ பைடனை போல அல்லாமல், புட்டினுடன் எப்போதும் நல்ல முறையிலான நட்புறவைத் தாம் தொடர்ந்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
