கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.