ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிகியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தினூடாக குறித்த திட்டத்துக்கான வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வணிக சபையுடன் நிதி பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும கலந்துரையாடியுள்ளதாகவும் நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்கள் தங்களது சேவைகளை இணையத்தளகதினூடாக மேற்கொள்கின்றன.
இதனுடாக ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் அவ்வாறான அரச நிறுவனங்களுக்குச் செல்லாமல் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.