பாணந்துறையில் பிரபல உணவகம் செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு கறி பனிஸ்களை உணவகத்திலிருந்து கொள்வனவு செய்துள்ளார்.
இளைய மகன் கறி பனிஸின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட போது அதனுள் லைட்டரின் உலோக பாகங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் உடனடியாக இது தொடர்பில் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த போதிலும், இன்று விடுமுறையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குத் இந்தப் பிரச்சினையைக் தெரிவிக்குமாறும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து குறித்த நபர், பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றிருந்த போதிலும் அங்கு முறைப்பாட்டை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த உணவகம் பாணந்துறை மாநகர சபைக்குட்பட்ட உணவகம் எனவும், இது தொடர்பில் மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அங்குள்ள பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் குறித்த நபரிடம் தெரிவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.