களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு (05) தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளது.
மருதானையில் இருந்து களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாகக் கரையோர மார்க்கத்தின் ஒரு வழித் தடம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.