இடைநிறுத்தப்பட்டுள்ள பேர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் (Perpetual Troasunes ) தனியார் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 4.30நிலிருந்து, குறித்த இடைநிறுத்த நீடிப்பு அமுலுக்கு வருவதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும்பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு நிறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் ஒழுங்கு விதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, குறித்த நிறுவனத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.