முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணை பிரிவிற்கு சென்றிருந்தார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி பணச்சலவை சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
அந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது
இதன்படி, முன்னாள் அமைச்சர் வியல் வீரவன்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பிவவுடன் குற்றப்புலனாய்வு கிணைக்களத்திற்கு பிரவேசித்ததாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.