மத்தியதரைக் கடலை கடக்க முயன்ற இரண்டு படகுகள் துனிசியாவின் ஸ்ஃபாக்ஸ் நகருக்கருகில் மூழ்கியதில், 27 ஆபிரிக்க குடியேற்றவாசிகள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துனிசியாவின் கடலோர காவல்படை மேற்கொண்ட மீட்புப் பணியில், 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 87 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவை நோக்கிப் பயணித்த இந்த குடியேற்றவாசிகள் ஆபத்தான கடல் வழிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
கடந்த மாதமும் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.