இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ஓஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாவி இராஜ்ஜியத்தில் இறைது வருகை தந்துள்ளது:
1.185 பயணிகள் மற்றும் 750 குழாமினருடன் குறித்த கப்பல் பிரவேசித்துள்ளது.
நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு களனி ஜமஹா விகாரை பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைத்துள்ள குறித்த கப்பல் இன்றிரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.