இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் வியனகே மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இன்று தமது பதவிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ரியர் அட்மிரல் காஞ்சன பணர்கொட இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகக் கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சிலவாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
அவரது பதவிக் காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.