சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்று (30.12.2024) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது. உண்மை, நீதி மற்றும் பொறுப்பை உறுதிசெய்வதற்கு பன்னாட்டுச் சமூகத்தினுடைய தலையீட்டினைக் கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் தாங்கியவாறு, கண்ணீருடனும் ஏக்கத்துடனும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.“துயருடனும் தேடுதல்களுடனும் எங்கள் வாழ்க்கையைக் கழிக்க முடியாது, சர்வதேச சமூகம் தலையிட்டு நீதியை வழங்க வேண்டும்” எனும் கோசங்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நன்றி : ஒளிப்படங்கள் @Kumanan Kana