பண்டிகைக் காலத்தையொட்டி கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை விஷேட தொடருந்து சேவையை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பதுளைக்கான விஷேட தொடருந்து சேவை கொழும்பு கோட்டையிலிருந்து இன்று இரவு 7.30 மற்றும் நாளை காலை 7.45இற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
அதேநேரம், கொழும்பு கோட்டைக்கான தொடருந்து சேவை பதுளையிலிருந்து நாளை காலை 7.05 இற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.