தென்மேற்கு துருக்கியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது உலங்குவானூர்தி மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை ஒன்றுக்கு சொந்தமான உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தில் இரண்டு விமானிகள், ஒரு வைத்தியர் மற்றும் ஒரு வைத்தியசாலை ஊழியர் ஆகியோர் உயரிழந்துள்ளனர்
விபத்தின் போது அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துருக்கி ஜனாதிபதி தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.