கனேடிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (யாழ் மற்றும் கிளிநொச்சி) மற்றும் சண்முகம் குகதாசன் (திருகோணமலை) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (21.12.2024) கனடாவின் ரொறொன்ரோவில் நடைபெற்றுள்ளது.
கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் கிளிநொச்சி மக்கள் பேரவை, வட்டக்கச்சி மக்கள் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் புலம்பெயர் ஈழத் தமிழ் உறவுகள் உள்ளடங்கலாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, ஈழத்தமிழர்களுக்கான நிலையான அரசியல் தீர்வை நோக்கிய அடுத்தகட்ட நகர்வுகளில் கனேடிய அரசின் வகிபாகம், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் கனேடிய உறவுகளின் அடுத்தகட்ட அரசியல் செயல்நோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.