இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது
குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
குவைத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பழமைவாய்ந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
பிரதமர் மோடியின் இந்த விஜயத்தில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது