காலி தடல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைநதுள்ளார்
உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்து மற்றுமொரு உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 38 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.