தமிழ்த் திரைப்படப் பிரபல இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் இன்று (19) காலமானார்.
அவர் இயக்கிய திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் முதல் பார்வை சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்றவர்கள் அதில் நடித்துள்ளனர்.இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.