சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் திரு. அசோக சப்புமல் ரண்வெல இன்று (13.12.2024) தனது சபாநாயகர் பதவியினைத் துறந்தார். சிறிலங்காவின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று புதிய சபாநாயகர் தெரிவுகள் உள்ளிட்ட தெரிவுகள் நடைபெற்று ஒரு மாதகாலம் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் சபாநாயகர் பதவி விலகியுள்ளார்.
சபாநாயகரது கலாநிதி பட்டம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில், அவர் கற்றதாகக் கூறப்படும் பல்கலைக்கழகமும் அவர் தமது பல்கலைக்கழகத்தில் பயிலவில்லை என்பதனை அண்மையில் உறுதி செய்திருந்தது. இவ்வாறானதொரு நிலையில் அதிருப்தி நிலவிய நிலையில் எதிர்க்கட்சிகளும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டிருந்த நிலையில் சிறிலங்கா பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.