சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற அதிபர் பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள அந்நாட்டு போராட்ட குழுவினர், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.
ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.