பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம காவல்த்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 35 வயதுடையவர் என காவல்த்துறை சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிபென்ன காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.