சிறி லங்காவின் புதிய முதன்மை அமைச்சர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை இன்று (18.11.2024) அரச தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டது. அண்மையில் நடைபெற்று முடிவடைந்த அரச தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாண்மை இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் இன்று அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொறுப்பேற்றுக் கொண்டது.
புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு,
அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்க | பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் |
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய | கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் |
விஜித ஹேரத் | வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் |
பேராசிரியர் சந்தன அபேரத்ன | பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் |
சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார | நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் |
சரோஜா சாவித்ரி போல்ராஜ் | மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் |
கே.டி லால் காந்த | விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் |
அநுர கருணாதிலக | நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் |
ராமலிங்கம் சந்திரசேகர் | கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் |
பேராசிரியர் உபாலி பன்னிலகே | கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் |
சுனில் ஹந்துன்னெத்தி | கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் |
ஆனந்த விஜேபால | பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் |
பிமல் ரத்னாயக்க | போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் |
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி | புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் |
டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ | சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் |
சமந்த வித்யாரத்ன | பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் |
சுனில் குமார கமகே | இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் |
வசந்த சமரசிங்க | வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் |
பேராசிரியர் கிரிசாந்த அபேசேன | விஞ்ஞான,தொழில்நுட்ப அமைச்சர் |
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ | தொழில் அமைச்சர் |
பொறியியலாளர் குமார ஜயகொடி | வலுசக்தி அமைச்சர் |
டொக்டர் தம்மிக பட்டபெந்தி | சுற்றாடல் அமைச்சர் |
பதவியேற்றுக் கொண்ட சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் பின்வரும் விடயங்கள் கவனம் பெறுகின்றன.
- தனியே அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
- இரண்டு தமிழர்களிற்கு புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ள போதும், தமிழ் இசுலாமியர்கள் எவருக்கும் இடம் வழங்கப்படவில்லை.
- வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இன்றி அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தமிழர்கள் இருவர் பதவியேற்றுக் கொண்ட தமிழர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகர் தேசியப் பட்டியல் ஊடகவே பாராளுமன்றத்திற்குள் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.
- மற்றொரு தமிழரான சரோஜா சாவித்தி போல்ராஜ் மலையத் தமிழராகக் கருதப்படுகின்ற போதிலும் பெரும்பாண்மையாக மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்தல்லாமல் மாத்தறை மாவட்டத்திலிருந்து சிங்கள மக்களின் விருப்பு வாக்குளினால் தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது பதவிப்பிரமானத்தை சிங்களத்திலேயே மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.