மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்தற்காக 2 இலட்சத்து 86 ஆயிரத்து 186 வாக்குகள் அளிக்கப்பட்டதையடுத்து 63.44 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை 357 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் 5 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக 392 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் 442 வாக்கு சாவடியில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்ஆரம்பமாகி கொட்டும் மழைக்கும் மத்தியில் மக்கள் ஆர்வமாக சென்று வாக்களித்தனர்.
அதேவேளை தமிழரசுகட்சி வேட்பாளர் இரா.சாணக்கியன், பட்டிருப்பு மகா வித்தியால வாக்குசாவடியிலும், முன்னாள் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும், ஞா.சிறிநேசன் மட்டு.ஜோசப் வித்தியாலயத்திலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.சுரேஸ் கொக்கட்டிச்சோலை முனைக்காடு சாரதா வித்தியாலயத்திலும், சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் நா.உ. கோ.கருணாகரம், இரா.துரைரெத்தினம் புனித மிக்கேல் கல்லூரியிலும், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவரும் வேட்பாளருமான அருண் தம்பிமுத்து சிசிலியா பெண்கள் பாடசாலையிலும். ரி.எம்.வி.பி. கட்சி வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) பேத்தாளையிலும் ஐக்கிய மக்கள் சத்தி வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி களுவாஞ்சிக்குடியிலும், முன்னாள் அமைச்சர் அமீர் அலி ஓட்டுமாவடியிலும்.
ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை பதி செய்தனர்.