நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல தொடரூந்துகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ்தேவி புகையிரதமும், கோட்டையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் இரவு அஞ்சல் புகையிரதமும் இன்று (13), நாளை (14) மற்றும் நாளை மறுதினம்(15) மேலதிக பெட்டிகள் சேவையில் இயங்கும் என புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தலை முன்னிட்டு சிறப்பு தொடரூந்துகள் இயக்கப்படாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.