கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கேன் பாரிசோதனை செய்த போது, அவர் உடலில் மறைத்து போதைப்பொருளை கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. 32 வயதான சந்தேகநபர், துருக்கி விமானம் ஒன்றின் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் விழுங்கிய போதைப்பொருள் அடங்கிய 17 குழிசைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கொக்கெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது