அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகின்றது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடுகள் தீவிர கவனம்
அதேபோன்று இம்முறை பொதுத் தேர்தல் பிரசார பணிகளும் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றமை குறித்து ஆசிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.