ரஷ்யாவுக்கு மின்னணு சாதனங்களை விற்பனை செய்ததாக தெரிவித்து 19 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு தேவையான மின்னணு சாதனங்கள், ஆயுத உதிரிபாகங்கள், இராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவை வடகொரியா, சீனா, இந்தியா, துருக்கி, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கஜகஸ்தான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து மறைமுகமாக கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதை அமெரிக்க அரசு கண்டுபிடித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதில் இந்தியாவை சேர்ந்த 19 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.