திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் தற்கொலை – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

Last updated: அக்டோபர் 19, 2024 06:08
Share
2 Min Read
SHARE

எமக்குள்ளான அகவயமான முற்போக்கு மாற்றமே உண்மையான மாற்றம்: தென்னிலங்கையிலிருந்து வருவதில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இன்று  (18.10.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியத்தினர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தனர்.

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 

மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும்.

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

You Might Also Like

நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி!
கோப் குழுவின் தலைவராக அரவிந்த செனரத் தெரிவு!
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 18 ஆம் திகதி!
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது..! விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
TAGGED:Featured
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் – உரிமை கோரிய இசுரேல்
Next Article இலங்கையில் தீவிரத் தாக்குதல் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை !
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.