திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்செய்திகள்

முன்னணியின் வேட்பாளர் இறுதி நேரத்தில் தமிழரசுக்கு கட்சி தாவல் வேட்புமனுத் தாக்கல்

Last updated: அக்டோபர் 10, 2024 18:24
Share
1 Min Read
SHARE

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி, மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு,முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (10)  தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய தோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார். புதன்கிழமை(9) குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்ற மையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை (10) இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You Might Also Like

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம்!
வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ!
ஆபிரிக்கப் நத்தைகளால் பேராபத்து விளையும் – பொ.ஐங்கரநேசன்
தமிழின துரோகிகளுடன் கை கோர்ப்பது மிக கேவலம் – முகத்திரையை கிழிக்கும் கருணாநிதி

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article சஜித் அணியிலிருந்து சம்பிக்க விலகல்
Next Article பொதுத்தேர்தலில் 11 ஆசனங்கள் செல்வத்திற்கு வந்த நம்பிக்கை !
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.