ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமது கட்சியான ஐக்கிய குடியரசு முன்னணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதால் இம்முறை பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் சிறிலங்காவின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.