சிறிலங்காவின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நியமனம் சிறிலங்கா அரச தலைவர் பணிமனையில் இன்று (10.10.2024) சிறிலங்காவின் அரச தலைவர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சிறிலங்காவின் அரச தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரி
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான அவர் 1985 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார். 1997ம் ஆண்டு அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுப் பெற்றார். சிறிலங்காவின் பதில் பிரதம நீதியரசரான முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ மொரட்டுவை கல்லூரியின் பழைய மாணவியாவார்.