திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!

Last updated: ஜூலை 5, 2025 14:14
Share
SHARE

இலங்கை செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டி மேலூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : மத்திய, மாநில அரசுகள் செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக, இலங்கை யாழ்பாணம் பகுதியில் உள்ள செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மீது ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில்.  இதுகுறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பன்னாட்டு நீதிமன்ற விசாரணையை நடத்தி சிங்கள ராணுவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசு வழக்கம்போல கள்ள மவுனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

செம்மணியிலிருந்து சந்திரசேகரனை விரட்டியது தவறு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார்? இந்தியாவிலிருந்து ஒலித்த குரல்
ஜப்பானிடமிருந்து சிறி லங்காக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி!
இனவாதத்தை தூண்டும் கஜேந்திரகுமார் – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article யுத்தத்தை நடத்த மகிந்தவுக்கு உதவியவர்களே ஜேவிபி-மனோ கணேசன் பகிரங்கம்
Next Article இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
இன்றும் தொடரும் அகழ்வு பணிகள்
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.