திங்கட்கிழமை, 7 ஜூலை 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • செம்மணி
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

யாழில் மதுபானசாலைகளுக்கு அனுமதி – யாழில் போராட்டம் !

Last updated: ஜூன் 27, 2025 08:52
Share
SHARE

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (26) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதன் தாக்கம் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குடும்பத்தவர்கள் என சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரிடத்திலும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் குடும்பங்களிடையே பல்வேறு விதமான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு போதைப்பொருள் பாவனையில் இருந்து அனைவரையும் மீட்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி, எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவை தானா?, சிறி லங்கா அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே, மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம், போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனல்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு சங்கானை பிரதேச செயலகத்தினர், வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், மானிப்பாய் பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆதரவு வழங்கினர்.

You Might Also Like

UNP-SJB இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சிஐடி யில் இன்று முன்னிலையாகும் யோஷித்த ராஜபக்ஷ!
வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ!
அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படும் – பிரதமர்

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article கல்கிசை – காங்கேசன்துறை தினசரி கடுகதி தொடருந்து சேவை ஆரம்பம்
Next Article யாழ். மாநகர சபை விசேட அமர்வில் குழப்பம்
யாழ்.செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
செய்திகள்
விரைவில் சிறி லங்காக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
செய்திகள்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!
செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்-அமைச்சர் விஜித ஹேரத்
அரசியற் செய்திகள்
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்
செய்திகள்
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அணி திரள்விற்கு அழைப்பு !
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.