புதன்கிழமை, 25 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.சர்வமதப் பேரவை

Last updated: ஜூன் 25, 2025 04:59
Share
SHARE

யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி விவகாரம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளதுடன், இதற்கு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என யாழ்ப்பாணம் மாவட்ட  சர்வமதப் பேரவை யின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி, மாண்புமிக்கது. அதனை மதிப்புடன் நோக்குவதும் அறம் மைய ஆன்மீகத்துடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை, இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து சமயம் மற்றும் பௌத்தம் தெளிவாக விளக்கியுள்ளது.

அன்புடனும் நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம், எம்மவரது எலும்புகளை செம்மணி உட்பட பல இடங்களிலும், மனித புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கிறோம் என்பது மிகமிக வேதனைக்குரியது.

இது கடவுளுக்கு எதிரான, சமய விழுமியங்களுக்கு எதிரான கொடுமையான செயல். இந்தக் கொடுமையுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் நீதியின் முன்கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றின் 46/1 தீர்மானத்தின்படி, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைக், காலம் தாழ்த்தாது. விரைவாகச் சேகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த புதைகுழிகளுக்குள் எமது உறவுகள் உள்ளனரா?” எனும் கேள்வியை எழுப்புவதை சர்வதேச சமூகம், இலங்கையில் வாழ்வோர் அனைவரும் தெளிவாக செவிமடுத்து, அவர்களுக்கு நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

You Might Also Like

இன்று காலை முதல் மட்டக்களப்பில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!
காவல்துறையினால் அமுல்படுத்தப்பட்ட இரு போக்குவரத்து திட்டங்கள்!
சீகிரியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

எமக்குத் தெரியவந்துள்ள அனைத்து மனித புதைகுழிகளையும் மீளப்பார்ப்பதும், சர்வதேச கண்காணிக்கப்புடன் அகழ்வாராய்ச்சி மிக வேகமாக நடைபெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை
Next Article செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்
அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் வோல்கர் டர்க்
செய்திகள்
ஈழத்தமிழரைக் கைவிட்டது போல் மலையக மக்களைக் கைவிடாதீர்கள் – மனோ கணேசன்
அரசியற் செய்திகள்
செம்மணியில் பதற்றம்! விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம்
செய்திகள்
பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை
பன்னாட்டுச் செய்திகள்
தமிழின படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
அரசியற் செய்திகள்
ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து
செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.