திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
பண்பாடு

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

Last updated: ஜூன் 18, 2025 07:57
Share
SHARE

மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.

இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான உத்தரவை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான உத்தரவை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன்படி, F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாக கூறப்படுகின்றன.

ட்ரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலான் மஸ்க் உட்பட பலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Next Article அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.