பெரும்போகத்திற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் நிதியுதவியை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகின்றன.
முதல் கட்டத்தில் 15,000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தில் 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், விவசாயிகளின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நேர்மறையான மற்றும் முறையான அமைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதற்காக விவசாய அமைப்புகளிடமிருந்து யோசனைகள் கோரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நிதி உதவிகளுக்கு மேலதிகமாக அரசாங்கம் தற்போது 25,239.73 மெற்றிக் டன் பொற்றாசியம் குரியேட்டு உரத்தை இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.