தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு)பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (3) சந்தித்தார்.
கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று முன்தினம் (1) தமது புதிய நியமனத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நேற்று (02) பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஐயசேகரவை சந்தித்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ 25ஆவது இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.