திங்கட்கிழமை, 23 ஜூன் 2025
Muransei | முரண்செய்
  • முகப்பு
  • செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • திறனாய்வு
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • பொருண்மியம்
  • சமூகம்
  • கல்வி
  • பண்பாடு
  • காலநிலை மாற்றம்
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
Muransei | முரண்செய்Muransei | முரண்செய்
Font ResizerAa
  • பலத்தீன போர்
  • பூகோள அரசியல்
  • பொருண்மியம்
  • காலநிலை மாற்றம்
  • சமூகம்
  • சூழலியல்
Search
  • செய்திகள்
  • அரசியற் செய்திகள்
  • பன்னாட்டுச் செய்திகள்
  • ஆய்வுகள்
  • கருத்துக்கள்
  • திறனாய்வு
© 2024 MuranSei. All Rights Reserved.
அரசியற் செய்திகள்

முந்தைய அரசாங்கம் வழங்கிய அனுமதியால் ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!

Last updated: டிசம்பர் 30, 2024 12:54
Share
SHARE

புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய முறைமையை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை பாதுகாக்கப்படவில்லை என்றும். கட்டுப்பாட்டு முறைகளை முற்றிலும் புறக்கணித்து திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் சிறி லங்கா பணியாளர்களின் பணவனுப்பலை ஊக்குவிக்கும் நோக்கில், குறித்த பணியாளர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவுக்கு ஏற்பட்ட மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான திட்டத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு 2022 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது.

வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட இந்த தீரமானத்தின் பிரகாரம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் வாகனத்திற்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி விலக்கு வரம்பு 6 மில்லியன் ரூபாயிலிருந்து 12 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது

You Might Also Like

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 18 ஆம் திகதி!
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு!
சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து மீனவர்களை பாதுகாக்குமாறு கோரிக்கை
ஜப்பானிடமிருந்து சிறி லங்காக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி!

குறித்த தீர்மானத்துக்கமைய 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை 1,077 அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 77 இரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதிக்குள் ஆயிரம் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களில் 510 அனுமதிப்பத்திரங்களே இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த திகதிக்குள் 375 மின்சார வாகனங்கள் மாத்திரமே மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பாக 2022 மே மாதம் முதலாம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்ட திட்டம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த செயல்முறை தொடர்பான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தகவல்களை ஆவணப்படுத்தும் முறையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பின்பற்றவில்லை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அனைத்து விடயங்களையும் அமைச்சின் பல அதிகாரிகள் முறைகேடாக பின்பற்றியமையினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளமை கவனிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடு சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நால்வருக்கும் மின்சார வாகனங்கள் இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேநேரம், குறுகிய காலத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும், இடையிடையே வெளிநாடு சென்றவர்களுக்கும் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அனுமதிப்பத்திரங்கள் மூலம் சிறி லங்காக்கு இறக்குமதி செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட 375 வாகனங்களில் 84 வாகனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் கீழ வாகனங்களை இறக்குமதி செய்தவர்களில் 164 மாலுமிகள், 150 முகாமையாளர்கள், 96 பணிப்பாளர்கள், 76 பொறியியலாளர்கள், 61 அதிகாரிகள், 24 ஆலோசகர்கள், 3 மருத்துவர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஒருவரும் உள்ளடங்குவதாக குறித்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Facebook
  • X
https://chat.whatsapp.com/HlW4wEDWN7xAl9UYgrmqCT
Share This Article
Facebook X Email Copy Link Print
Previous Article வலிந்து காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
Next Article தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது!
ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி
செய்திகள்
வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டக் களங்கள்
செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
அரசியற் செய்திகள்
ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
பன்னாட்டுச் செய்திகள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி போராட்டத்திற்கு அழைப்பு
செய்திகள்
அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய முஜிபுர் ரஹ்மான்!
அரசியற் செய்திகள்
Muransei | முரண்செய்

ஈழம் மற்றும் பன்னாட்டுச் செய்திகளை ஊடக அறம் கொண்டு புலனாய்வுப் பார்வையுடன், செய்திகளை அறிவுசார் கண்ணோட்டத்துடன் மக்களை அணுகுவதற்குத் தூண்டும் தாயகத்தின் தமிழ்ச் செய்தி ஊடகம்.

Youtube Facebook X-twitter

© Muransei All Rights Reserved.